செய்திகள்

திருப்பதியில் ‘லத்தி’ புரமோஷன்! 

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் லத்தி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி திருப்பதியில் நடைபெற்றது. 

DIN

‘வீரமே வாகை சூடும்’ படத்தக்கு பிறகு லத்தி என்ற படத்தில் விஷால் நடித்துவருகிறார். இந்தப் படத்தை நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா இருவரும் இணைந்து தயாரித்து வருகின்றனர். வினோத் குமார் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.

யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். சுனைனா விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார். விஷால் போலீஸாக நடித்துவரும் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர்  வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.  

லத்தி திரைப்படம் முதலில் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருந்தது. பின்னர், சில பிரச்னைகள் காரணமாக படம் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, இப்படத்தின் டிரைலர் டிச.12ஆம் நாள் வெளியாகியது.  

இப்படம் டிசம்பர் மாதம் 22ஆம் தேதி கிறிஸ்துமஸை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது. மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாக உள்ளது. அதனால் படத்திற்கு பல்வேறு இடங்களில் புரமோஷன் செய்ய விஷால் திட்டமிட்டுள்ளார். அதன்படி தற்போது திருப்பதி சென்றுள்ளார்.

திருப்பதி எஸ்.வி. என்ஜினியரிங் கல்லூரியில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. விஷால் ஃபிளிம் பேக்டரி யூடியூப் தளத்தில் இதனை நேரடியாக பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்நாடு ஒத்துழைக்கவில்லையா? ம.பி. அரசுக்கு மா. சுப்பிரமணியன் பதில்!

இன்று கிருஷ்ணகிரிக்கும் நாளை நீலகிரிக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை!

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு! டொனால்ட் டிரம்புக்கு ஏமாற்றம்

இட்லி கடை படத்தை மாணவர்களுக்கு இலவசமாக திரையிட வேண்டும்: தமிழக பாஜக

உங்கள் பணம் பறிபோகலாம்! போலி நீதிமன்ற உத்தரவு மோசடி எச்சரிக்கை!!

SCROLL FOR NEXT