செய்திகள்

வாரிசு படத்தில் அனிருத்தும் பாடியுள்ளார்: இதோ 5 பாடல்களின் விவரம்! 

விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் வாரிசு படத்தில் பிரபல இசையமைப்பாளர் அனிருத் பாடல் பாடியுள்ளார். 

DIN

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். சங்கீதா, ஷியாம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். முதல் பாடல் ரஞ்சிதமே 100 மில்லியன் (10 கோடி) பார்வையாளர்களையும், இரண்டாவது பாடல் ‘தீ தளபதி’ 26 மில்லியன் (2.6 கோடி) பார்வையாளர்களையும் யூடியூபில் சமீபத்தில் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  3வது பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்று வருகிறது. 

படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (டிசம்பர் 24) மாலை 4 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. வாரிசு படத்தில் 5 பாடல்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அனைத்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். 

1. ரஞ்சிதமே: பாடியவர்கள்: விஜய், எம்.எம். மானசி.
2. தீ தளபதி: பாடியவர்கள்: தமன், சிம்பு 
3. சோல் ஆஃப் வாரிசு: பாடியவர்- சித்ரா 
4. வாரிசு என்ட்ரி: பாடியவர்-அனிருத் 
5. வாரிசு மெலோடி: பாடியவர்கள்- சித் ஸ்ரீராம், ஜோனிடா காந்தி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள் நலனில் சமரசம்! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

ஊர்க்காவலன் (பாகம்-2)

எப்ஸ்டீன் கோப்புகள்! ரஷிய பெண்ணுடன் உறவு; பில்கேட்ஸுக்கு பால்வினை நோய்?

விசில்

நிலம், நீர், நிழல்: தமிழ் இலக்கியங்களில் சூழலியல்

SCROLL FOR NEXT