செய்திகள்

அஜித்தின் ‘கண்ணான கண்ணே’ பாடல் புதிய சாதனை: இமான் நெகிழ்ச்சி ட்வீட்! 

நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தின் பாடல் ஒன்று புதிய சாதனை படைத்துள்ளது. 

DIN

அஜித் - சிவா ஆகிய இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம் - விஸ்வாசம். கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்த இப்படத்தில் ஜகபதி பாபு, விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, கோவை சரளா போன்றோரும் நடித்துள்ளார்கள். இப்படத்துக்கு இசை - இமான், ஒளிப்பதிவு - வெற்றி. இந்தப் படம் 2019இல் ஜனவரி 10-ம் தேதி வெளியானது.  

நல்ல வரவேற்பினைப் பெற்ற இப்படத்தில் இடம்பெற்ற தந்தை மகள் பாசம் பெரிதாக மக்களிடையே பேசப்பட்டது. இதில் கண்ணான கண்ணே பாடல் தற்போது யூடியூபில் 200 மில்லியன் (20 கோடி) பார்வையாளர்களை கடந்துள்ளது. 

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் இமானுக்கு தேசிய விருது கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. இது குறித்து இந்தப் பாடலின் இசையமைப்பாளர் டி.இமான் தனது ட்விட்டர் பக்கத்தில், “ கடவுளின் பூமியில் உள்ள எல்லா தந்தைகளுக்கும் இந்தப் பாடல் சமர்பணம்” என தெரிவித்துள்ளார். இந்தப் பாடலை எழுதியவர் தாமரை. பாடியவர் சித் ஸ்ரீராம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமைதிக்கான நோபல் பரிசை டிரம்ப்புக்கு சமர்ப்பிக்கிறேன்! - மரியா மச்சாடோ

ஆர். நல்லகண்ணு டிஸ்சார்ஜ்

கனவுத் தயாரிப்பு... அப்ரீன் ஆல்வி!

லோதா டெவலப்பர்ஸ் விற்பனை 7% அதிகரிப்பு!

பெரிய ஸ்கோரை எதிர்பார்த்தேன்... சதத்தை தவறவிட்டது குறித்து சாய் சுதர்சன்!

SCROLL FOR NEXT