செய்திகள்

அஜித்தின் எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து கேலிக்குள்ளான நடிகர்! 

நடிகர் அஜித் குமாரின் எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தினை பகிர்ந்து ரசிகர்களின் கிண்டலுக்கு உள்ளாகி வருகிறார் நடிகர் கிருஷ்ணா. 

DIN

நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் 'துணிவு'. பஞ்சாபில் நடைபெற்ற வங்கி்க் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. 

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

துணிவு படத்தில் இரண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்தவகையில் தற்போது மூன்றாவது பாடலின் வரிகளை ஜிப்ரான் சமீபத்தில் வெளியிட்டார்.3வது பாடலை படக்குழு நேற்று வெளியிட்டது.

கழுகு படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் கிருஷ்ணா. இவர் நடிகர் அஜித்தின் புதிய புகைப்படத்தினை பகிர்ந்து தீயாக இருப்பதாக எமோஜிக்களை பதிவிட்டு இருந்தார். இந்தப் புகைப்படம் அதிகாரபூர்வமாக படக்குழு வெளியிடவில்லை. ரசிகர்கள் எடிட் செய்த ஒன்று. இது தெரியாமல் பகிர்ந்து இணையத்தில் கிண்டலுக்குள்ளாகி வருகிறார். இணையத்தில் பகிரும் முன்பு உண்மைதன்மை பரிசோதிக்க வேண்டுமென அவரது பதிவிற்கு கீழ் இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

துணிவு படம் பொங்களுக்கு வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

25 ஆண்டுகளுக்குப் பிறகு... தெ.ஆ. வரலாற்று வெற்றி..! இந்தியா ஒயிட்வாஷ்!

மாவீரன் பொல்லான் சிலையுடன் கூடிய அரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்

நிர்வாணக் காட்சியில் நடித்தது ஏன்? ஆண்ட்ரியா விளக்கம்!

3 நாள்களுக்குப் பிறகு பங்குச் சந்தை உயர்வுக்கான 3 காரணங்கள்?

10 நிமிடத்திற்கு ஒரு பெண், நெருங்கிய உறவினரால் கொல்லப்படுகிறார்! - ஐ.நா.

SCROLL FOR NEXT