செய்திகள்

'மைக்கேல்' படத்தின் புதிய அப்டேட்! 

மாநகரம் புகழ் சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகிவரும் ‘மைக்கேல்’ படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

DIN

புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படங்களை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ‘மாநகரம்’ படத்தில் நடித்து புகழ்பெற்ற சந்தீப் கிஷன் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ‘மெக்கேல்’ என பெயரிடப்பட்டுள்ளது. 

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் வரலட்சுமி சரத்குமார், அனுசுயா, திவ்யன்ஷா கௌசிக் உள்ளிட பலர் நடித்துள்ளனர். 

இந்தப் படத்தினை ஸ்ரீ வெங்கடேஷ்வரா ஸ்ரீனிவாஸ் தயாரிக்க, சாம் சி.எஸ். இசையமைக்கிறார். நாளை (டிச.28) இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது. 

ஏற்கனவே இந்தப் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் அடுத்தாண்டு பிப்ரவரியில் திரைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

SCROLL FOR NEXT