செய்திகள்

துணிவு படத்திற்கு வானத்தில் வேற லெவல் புரமோஷன்!

நடிகர் அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள துணிவு படத்தின் புதிய புரமோஷன் விடியோ வெளியாகியுள்ளது. 

DIN

நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் 'துணிவு'. பஞ்சாபில் நடைபெற்ற வங்கி்க் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. 

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.  

இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘சில்லா..சில்லா’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இப்படத்தின் அடுத்த பாடலான ‘காசேதான் கடவுளடா’ பாடலும், கேங்ஸ்டா பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. 

இந்நிலையில் லைகா நிறுவனம் வெளிநாடுகளில் வேற லெவல் புரமோஷனை செய்து வருகிறது. வானத்தில் ஸ்கை டைவிங் செய்து கொண்டு துணிவு படத்தின் அப்டேட் டிச.31 அன்று வெளியாகுமென புதிய புரமோஷன் விடியோவை வெளியிட்டுள்ளனர்.

அஜித் ரசிகர்கள் இந்த விடியோவினை பகிர்ந்து வேற லெவல் அப்டேட் என இணையத்தில் வைரலாக்குகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT