செய்திகள்

புலி வால் பிடித்து விடியோ வெளியிட்ட நடிகருக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது!

தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த விடியோவிற்காக பலரது எதிர்வினைனகளுக்கு உள்ளான காமெடி நடிகர். 

DIN

தமிழில் நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனானவர் சந்தானம். சமீபத்தில் காமெடி த்ரில்லராக வெளிவந்த ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’  திரையரங்குகளில் வெளியானது.

தெலுங்கு படத்தின் ரீமெக்காக எடுக்கப்பட்ட இந்தப் படம் விமர்சனம் ரீதியாக நன்றாக வந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. கடந்த வாரம் இந்தப் படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியானது. புத்தாண்டுக்கு பிரபல தமிழ்  தொலைக்காட்சியிலும் வெளியாக உள்ளது. 

தற்போது சுற்றுலா சென்றபோது புலியின் வாலை பிடித்து விடியோவாக தனது ட்விட்டர் பக்கத்தில் “இதுக்கு பேர்தான் புலி வாலை புடிக்கிறதா” என ஜாலியாக பதிவிட்டு இருந்தார்.

இந்த விடியோ வைரலானது. ஆனால் அதேசமயம் அவருக்கு பல எதிர்வினைகளும் வந்துக்கொண்டு இருக்கிறது. இதற்கு பலரும், “இதெல்லாம் மிருக வதை”, “அன்பு கிடையாது”, “இதற்குபேர்தான் சுற்றுலாவா?” என பலர்  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிகளைப் பிடித்தது எப்படி? காவல் ஆணையர் பேட்டி! | CBE

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த முன்னாள் போட்டியாளர்கள்!

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?

SCROLL FOR NEXT