செய்திகள்

என்னது 'வலிமை' பட பின்னணி இசை யுவன் இல்லையா ? : வேறு இசையமைப்பாளரா ?

வலிமை படத்துக்கு யுவனுக்கு பதிலாக வேறு இசையமைப்பாளர் பின்னணி இசை அமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்க வினோத் இயக்கியுள்ளார். பொங்கலை முன்னிட்டு இந்தப் படம் ஜனவரி 13 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. 

இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்க, ஹுமா குரேஷி, சுமித்ரா, யோகி பாபு, புகழ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நீரவ் ஷா இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்தப் படத்திலிருந்து இரண்டு பாடல்கள் மற்றும் விசில் தீம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் யுவனுக்கு பதில் ஜிப்ரான் வலிமை படத்தின் பின்னணி இசையமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று படத்துக்கு ஜிப்ரான் தான் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை அஜித் படங்களில் யுவனின் பின்னணி இசை கால கடந்தும் நிற்கும் அளவுக்கு இருந்துள்ளது. இந்த நிலையில் வலிமை படத்தில் யுவன் பின்னணி இசை அமைக்காதது பெரும் பின்னடைவை ஏற்படுத்தக் கூடும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில்வே திட்டங்களுக்கு நிதி: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

வாஷிங்டன் போஸ்ட் ஊழியர்கள் பணிநீக்கம்: தலைமைச் செயல் அதிகாரியும் ராஜிநாமா!

சென்னையில் கடும் பனிமூட்டம்: திருப்பி விடப்பட்ட விமானங்கள்!

சென்னையில் கடும் பனிமூட்டம்: மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கம்!

சொல்லப் போனால்... விஜய்யின் அரசியல் களமும் சினிமா கால்ஷீட்டும்!

SCROLL FOR NEXT