செய்திகள்

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக பிரபல நடிகை தகவல்

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக பிரபல நடிகை ஸ்ரீபிரியா தகவல் தெரிவித்துள்ளார். 

DIN

நாடு முழுதுவதும் கரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் முன்களப் பணியாளர்கள், 60 வதுத்துக்கு மேற்பட்டோர், இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் நடிகை ஸ்ரீபிரியா தான் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக தனது ட்விட்டர் பக்கம் மூலம் அறிவித்துள்ளார். நடிகை ஸ்ரீபிரியா தற்போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். 

நடிகை ஸ்ரீபிரியா நடிகையாக மட்டுமல்லாமல் சில படங்களை இயக்கவும் செய்துள்ளார். மலையாளத்தில் வெற்றிபெற்ற திரிஷ்யம் படத்தை அதே பெயரில் தெலுங்கில் நடிகர் வெங்கடேஷ் கதாநாயகனாக வைத்து இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பியூன் வேலை: பிஎச்டி, எம்பிஏ உள்பட 24.76 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பம்!

கோவை: கிணத்தைக் காணோம் வடிவேலு காமெடி பாணியில் இல்லாத வீட்டுக்கு வரி!

துல்கர் சல்மான் - 41 படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்!

வரம் நீ... அர்ச்சனா கௌதம்

SCROLL FOR NEXT