செய்திகள்

''நடிகர் சத்யராஜ் முழு நலத்துடன் இருக்கிறார்'': சிபி தகவல்

சத்யராஜ் முழு நலத்துடன் இருப்பதாக அவரது மகன் சிபிராஜ் தெரிவித்துள்ளார். 

DIN

நடிகர் சத்யராஜ் சமீபத்தில் கரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் விரைவாக நலம் பெற வேண்டி, பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

இந்த நிலையில் நடிகர் சத்யராஜின் மகனும் நடிகருமான சிபிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது அப்பாவின் உடல் நிலை குறித்து பதிவிட்டுள்ளார். அதில், 

''அப்பா நேற்றிரவு (திங்கள்கிழமை) மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். அவர் முழு நலத்துடன் இருக்கிறார். சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு தனது பணியை அவர் தொடர்வார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி'' 

மற்றொரு பதிவில், ''அப்பா எந்தவித சமூக வலைதளங்களிலும் இல்லை. அவர் பெயரில் இருக்கும் கணக்குகள் தொடர்பாக புகார் அளியுங்கள்'' என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அண்ணாவின் அறிவுத் தீ பரவட்டும்!

விவசாயிகள் நலனில் சமரசம்! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

ஊர்க்காவலன் (பாகம்-2)

எப்ஸ்டீன் கோப்புகள்! ரஷிய பெண்ணுடன் உறவு; பில்கேட்ஸுக்கு பால்வினை நோய்?

விசில்

SCROLL FOR NEXT