சமந்தா சமீபத்தில் அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் ஓ சொல்றியா பாடலுக்கு நடனமாடியிருந்தார். இந்தப் பாடல் படத்துக்கே பெரிய பக்கபலமாக அமைந்திருந்தது. இந்தப் பாடல் விடியோ சமீபத்தில் யூடியூபில் வெளியாகி 50 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில் சமந்தா பாணியில் தமன்னாவும் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். வருண் தேஜ் ஹீரோவாக நடிக்கும் கனி (Ghani) படத்தில் தான் தமன்னா நடனமாடியுள்ளார். கோட்தே எனத் துவங்கும் இந்தப் பாடல் வருகிற ஜனவரி 15 ஆம் தேதி காலை 11.08 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | தனது உடல்நிலை குறித்து நடிகை த்ரிஷா புதிய தகவல்
இந்தப் படத்தில் வருண் தேஜுடன் ஜகபதி பாபு, உபேந்திரா, சுனில் ஷெட்டி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.