செய்திகள்

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ரசிகர்கள் முன் நேரில் தோன்றவிருக்கும் விக்ரம் - எங்க தெரியுமா?

கோப்ரா படத்தின் இசை வெளியீட்டுவிழாவில் நடிகர் விக்ரம் நேரில் கலந்துகொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

DIN

கோப்ரா படத்தின் இசை வெளியீட்டுவிழாவில் நடிகர் விக்ரம் நேரில் கலந்துகொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் விக்ரம் உடல் நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகிறார். அவர் மாரடைப்பு காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் பரவியது. 

இதனையடுத்து நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு இல்லை. அவருக்கு நெஞ்சில் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மக்கள் தொடர்பாளர் தெரிவித்திருந்தார். 

துருவ் விளக்கம் 

மேலும் அவரது மகன் துருவ், அப்பாவுக்கு நெஞ்சில் அசௌகரியமாக உணர்ந்தார். அதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெறுகிறார். அவருக்கு மாரடைப்பு இல்லை. வதந்திகளை கேட்டு எங்கள் மனம் வலிக்கிறது. 

அப்பா நலமாக இருக்கிறார். இன்னும் ஒருநாளில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார். இந்த பதிவு சரியான விளக்கமாக இருக்கும் என நினைக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

பொன்னியின் செல்வன் டீசர்

ஆதித்யகரிகாலனாக விக்ரம் நடித்துள்ள பொன்னியின் செல்வன் டீசர் நேற்று(ஜூலை 8) ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. டீசர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. நிகழ்வில் நடிகர் விக்ரம் கலந்துகொள்ளாதது ரசிகர்களுக்கு வருத்தமாக இருந்தது. 

கோப்ரா இசை வெளியீட்டு விழாவில் விக்ரம் ?

இந்த நிலையில், கோப்ரா இசை வெளியீட்டு விழா வருகிற ஜூலை 11 ஆம் தேதி சென்னையில் உள்ள பீனிக்ஸ் வணிக வளாகத்தல் நடைபெறவிருக்கிறது.  நடிகர் விக்ரம் நேரில் கலந்துகொள்விருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள கோப்ரா படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். 7 ஸ்கீரின் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக வெளியிடுகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தடைசெய்யப்பட்ட ‘துரந்தர்’ பட பாடலுடன் என்ட்ரி.. சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் அதிபர் மகன்!

துல்கர் படத்தில் இணைந்த கயாது லோஹர்!

வினா - விடை வங்கி... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 9

இந்திய அணியில் விளையாடிய பாகிஸ்தான் கபடி வீரர் மீது நடவடிக்கை!

ஆஷஸ் தொடர் : இங்கிலாந்து வீரர்களை விட அதிக ரன்கள் குவித்த மிட்செல் ஸ்டார்க்!

SCROLL FOR NEXT