செய்திகள்

தெலுங்கில் உருவாகும் 'மாநாடு' - ஹீரோ ஒரு பக்கம் இருக்கட்டும், எஸ்.ஜே.சூர்யா யார்?

தமிழில் வெற்றிபெற்ற மாநாடு திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

தமிழில் வெற்றிபெற்ற மாநாடு திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பரில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக நடிகர் சிம்புவுக்கு இந்தப் படம் திருப்புமுனையை ஏற்படுத்தித் தந்தது. 

மேலும் டைம் லூப் முறையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் இந்தப் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவிருக்கிறதாம். இந்தப் படத்தில் ராணா டகுபதி சிம்பு வேடத்தில் நடிக்கிறாராம்.

வெங்கட் பிரபு தற்போது தெலுங்கில் நாக சைதன்யா படத்தை இயக்கிவருவதால் மாநாடு தெலுங்கு படத்தை அவர் இயக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க எஸ்.ஜே.சூர்யா  வேடத்தில் நடிக்கவிருப்பது யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. 

ஏனெனில் அவரை விட சிறப்பாக வேறு ஒருவரால் நடித்துவிட முடியுமா எனும் அளவுக்கு எஸ்.ஜே.சூர்யா தனது முத்திரையை மிக அழுத்தமாக பதித்திருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாடா பன்ச் ஃபேஸ்லிப்ட் அறிமுகம்!

போகி பண்டிகை : புதுச்சேரியில் நாளை விடுமுறை!

பராசக்தியில் நடித்தது வாழ்நாள் பெருமை: சிவகார்த்திகேயன்

ஈரான் - அமெரிக்கா மோதலால் வளைகுடா நாடுகளுக்கு தீவிர பாதிப்பு - கத்தார் எச்சரிக்கை!

“ஜல்லிக்கட்டுனா.. எங்க ஊரு கயிறுதான்!” விறுவிறுப்பாக நடைபெறும் மூக்கணாங்கயிறு விற்பனை!

SCROLL FOR NEXT