செய்திகள்

கேரளத்தில் நாளுக்கு நாள் எகிறும் விக்ரம் பட வசூல்: அதிகாரபூர்வத் தகவல்

DIN

கேரளத்தில் விக்ரம் படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகமாகி தற்போது வரை ரூ. 15 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் நடித்த விக்ரம் படம் ஜூன் 3 அன்று வெளியானது. படம் வெளிவந்த நாள் முதல் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. பெரும்பாலான திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் திரையரங்குக் காட்சிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் இதன் சூழல் வசூலிலும் எதிரொலிக்கிறது.

விக்ரம் படம் உலகம் முழுக்க ரசிகர்களின் ஆதரவுடன் முதல் மூன்று நாள்களில் ரூ. 150 கோடி வசூலை எட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ. 100 கோடி வசூல் கிடைத்துள்ளது. முதல் நாள் வசூலை விடவும் அடுத்த இரு நாள்களின் வசூல் அதிகமாக இருப்பதாக விநியோகஸ்தர்கள் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. 

அமெரிக்காவில் 1 மில்லியன் டாலர் வசூலை எட்டிய 2-வது கமல் படம் - விக்ரம். சனிக்கிழமை வரை அமெரிக்காவில் 1.37 மில்லியன் அதாவது ரூ. 10.65 கோடி வசூலை அடைந்துள்ளது. இங்கிலாந்தில் ரூ. 2.78 கோடியும் ஆஸ்திரேலியாவில் ரூ. 2.60 கோடியும் வசூலித்துள்ளது.

இந்நிலையில் கேரளத்தில் விக்ரம் படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. முதல் நாளன்று ரூ. 5.02 கோடி வசூலித்த விக்ரம் படம் சனிக்கிழமையன்று ரூ. 5.05 கோடியும் நேற்று (ஞாயிறு) ரூ. 5.65 கோடியும் என இதுவரை கேரளாவில் மட்டும் ரூ. 15.72 கோடி வசூலித்துள்ளது. கேரளத்தில் படத்தை வெளியிட்டுள்ள தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ஷிபு தமீன்ஸ் இத்தகவலை உறுதி செய்துள்ளார். முதல் நாளை விடவும் 2-வது நாளில் அதிக வசூலைப் பெற்ற ஒரு படத்தை நான் பார்த்ததே இல்லை என அவர் கூறியுள்ளார். 

முதல் மூன்று நாள்களில் கிடைத்த வசூலின் அடிப்படையில் விக்ரம் படம், ரூ. 500 கோடி வசூலை அடையும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

SCROLL FOR NEXT