கோப்புப் படம் 
செய்திகள்

நான் சொன்னது இதுதான்: சாய்பல்லவி (விடியோ)

நடிகை சாய் பல்லவி சமீபத்தில் அளித்த நேர்காணலில் பேசியது சர்ச்சைக்குள்ளானதைத் தொடர்ந்து தற்போது விடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார். 

DIN

நடிகை சாய் பல்லவி சமீபத்தில் அளித்த நேர்காணலில் பேசியது சர்ச்சைக்குள்ளானதைத் தொடர்ந்து தற்போது விடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார். 

நடிகை சாய் பல்லவி சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் காஷ்மீரி ஃபைல்ஸ் திரைப்படம் முன்வைக்கும் கருத்து குறித்தும், முஸ்லிம் ஒருவர் தாக்கப்பட்டது குறித்தும் பேசியது சர்ச்சைக்குள்ளானது. அவரது கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பிய நிலையில் தற்போது விடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார். 

“முதன் முறையாக நான் இதுமாதிரி விளக்கம் கொடுத்து பேசுகிறேன். நான் இடதுசாரியா வலது சாரியா என கேள்வி எழுப்பப்பட்டது. நான் நடுநிலையானவர் என்பதை எப்போதும் தெரிவித்துக் கொள்கிறேன். நான் சொல்ல வந்தது வன்முறை எந்த விதத்தில்  நடந்தாலும் எந்த மதத்தில் நடந்தாலும் அது தவறு. அதைக் கண்டிக்க வேண்டும். எனக்காக குரல் கொடுத்து ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எல்லோரும் அமைதியையும் அன்பையும் பெற வாழ்த்துகிறேன்” என சாய் பல்லவி கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் வழக்கில் திடீர் திருப்பம்! தங்களுக்கே தெரியாமல் மனு... பாதிக்கப்பட்டவர்கள் புகார்!

வால்பாறையில் யானை தாக்கி பாட்டி, பேத்தி பலி

சீனாவின் உலகளாவிய ஏற்றுமதி அதிகரிப்பு! அமெரிக்க ஏற்றுமதி குறைவு!!

மகள் உயிருக்கு ஆபத்து! கூட்டு பாலியல் கொடுமைக்கு ஆளான மருத்துவ மாணவியின் பெற்றோர் கதறல்!!

தங்கம் விலை அதிரடி உயர்வு! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT