செய்திகள்

என்ன ஆட்டம்!? அரபிக் குத்து பாடலுக்கு ஷிவானியின் வேற லெவல் நடனம்

அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடிய ஷிவானியின் விடியோ வைரலாகி வருகிறது. 

DIN


அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் எழுதிய நடிகர் விஜய்யின் பீஸ்ட் பட அரபிக் குத்து பாடலை 12 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர். பாடல் வெளியான நாளிலிருந்து தற்போது இந்தப் பாடல்தான் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருக்கிறது.  

ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை இந்தப் பாடலுக்கு நடனமாடி விடியோ பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை ஷிவானி பீஸ்ட் பாடலுக்கு நடனமாடும் விடியோவைப் பகிர்ந்துள்ளார். அவர் தனது பதிவில், வழக்கம்போல இந்த டிரெண்டில் தாமதமாக இணைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகை ஷிவானி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் புகைப்படங்கள், விடியோக்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றதற்கு பிறகு அவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை கனிசமாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. 

ஷிவானி தற்போது கமல்ஹாசனின் விக்ரம், விஜய் சேதுபதி - பொன்ராம் படம், வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் பிக்பாஸ் பாலாஜி முருகதாஸுடன் இணைந்து நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா: மயிலம் முருகனுக்கு தீா்த்தவாரி

கூட்டுறவும் நாட்டுயா்வும்!

மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் தீ விபத்து

கோயில்களில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT