செய்திகள்

ஐரோப்பாவையே இந்தியாவுக்கு கொண்டுவந்துட்டாங்களே.! பிரபாஸின் ராதே ஷ்யாம் உருவான விதம் விடியோவாக வெளியானது

பிரபாஸ் - பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள ராதே ஷ்யாம் படத்தின் உருவான விதம் விடியோவாக வெளியாகியுள்ளது. 

DIN

மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ராதே ஷ்யாம் திரைப்படம் வருகிற மார்ச் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. 

இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, சத்யராஜ் ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் பிரபாஸ் கைரேகை நிபுணராக நடித்துள்ளார். ராதா கிருஷ்ணகுமார் இயக்கியுள்ள நிலையில், யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. 

கடந்த 1970களில் ஐரோப்பா பின்னணியில் இந்தப் படத்தின் கதைக் களம் அமைந்துள்ளது. இந்தப் படத்துக்கு ஜஸ்டின்  பிரபாகரன் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு டிரெய்லர்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில் தற்போது இந்தப் படத்தின் உருவானவிதம் விடியோவாக வெளியாகியுள்ளது. 

இந்தப் படத்தில் ஐரோப்பாவை தத்ரூபமாக செட் போட்டு மற்றும் விஎஃப்எக்ஸ் உதவியுடன் இந்தப் படம் படமாக்கப்பட்டுள்ளது. இது மிகவும் பிரம்மாண்டமான பொருட் செலவில் இந்தப் படம் உருவாகியுள்ளதைக் காட்டுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராம நிா்வாக அலுவலா்கள் போராட்டம்! சான்று கிடைக்காததால் நெல்லை விற்க முடியவில்லை! குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் முறையீடு

கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலில் தெற்கு ராஜகோபுரம் கட்டுமான பணி! காணொலியில் முதல்வா் தொடங்கி வைத்தாா்!

விமர்சிக்கப்படும் புகைப்பட பதிவுகள்!

நமோ பாரத், மீரட் மெட்ரோ பயணிகள் இவலச பயணத்திற்கு விசுவாசப் புள்ளிகளைப் பெறலாம்

பொன்னமராவதியில் நல்லகண்ணுக்கு புகழஞ்சலி

SCROLL FOR NEXT