செய்திகள்

''இது அரசியல் அல்ல..''.: பீஸ்ட் குறித்து கேஜிஎஃப் 2 நடிகர் யஷின் பேச்சால் ரசிகர்கள் நெகிழ்ச்சி

பீஸ்ட் குறித்து கேஜிஎஃப் 2 நடிகர் யஷின் பேச்சு ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

DIN


'கேஜிஎஃப் 2' படத்தின் டிரெய்லர் நேற்று (மார்ச் 27) பிரம்மாண்டமாக வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. டிரெய்லரில் ஒவ்வொரு காட்சிகளும் பிரம்மாண்டமாக உள்ளது. அதிரடி சண்டைக்காட்சிகளுடன் மாஸான பஞ்ச் வசனங்கள் என படத்தின் மீதான எதிர்பார்ப்பை டிரெய்லர் அதிகரிக்க செய்துள்ளது. 

;கேஜிஎஃப் 2; படம் குறித்து நடிகர் யஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ''கேஜிஎஃப் 2 மற்றும் பீஸ்ட் ஆகிய படங்கள் அடுத்தடுத்த நாளில் வெளியாவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த யஷ், ''கேஜிஎஃப் Vs பீஸ்ட் என்று சொல்லாதீர்கள். கேஜிஎஃப் மற்றும் பீஸ்ட் என சொலலுங்கள். ஏனெனில் இது தேர்தல் கிடையாது. தேர்தலில்தான் ஒருவர் வென்றால் மற்றொருவர் தோற்கவேண்டும். விஜய் ஒரு பெரிய நடிகர். பல ஆண்டுகளாக நடித்து வருகிறார். அவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. 

நான் பீஸ்ட் படத்தையும் பார்ப்பேன். என் படத்தையும் பார்ப்பேன். இரண்டு படங்களையும் கொண்டாடுவோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.  நடிகர் யஷின் பேச்சு விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

விஜய்யின் பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப் 2 திரைப்படங்கள் 5 மொழிகளில் வெளியாகிறது. இரண்டு படங்களுக்கும் போட்டி கடுமையாக இருக்கும் எனப் பேசப்பட்ட நிலையில் நடிகர் யஷின் பேச்சு அவர் மீதான மதிப்பை அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண் பத்திரிகையாளர்களுக்குத் தடை! தலிபான் அமைச்சரின் செய்தியாளர் சந்திப்பு சர்ச்சை!!

புதிய காதலி? ஹார்திக் பாண்டியாவின் புகைப்படங்களால் சர்ச்சை!

ஆற்காடு அருகே ஆம்னி வேன் மோதி கூலி தொழிலாளி பலி

முதல்முறையாக இணையும் விஜய் தேவரகொண்டா - கீர்த்தி சுரேஷ்..! பூஜை புகைப்படங்கள்!

தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம்: காணொலி மூலம் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை

SCROLL FOR NEXT