செய்திகள்

ரஜினி - நெல்சன் படத்தில் பிரபல கன்னட நடிகர்?

பீஸ்ட் படத்துக்கு அடுத்ததாக ரஜினி நடிக்கும் படத்தை இயக்குகிறார் நெல்சன்.

DIN

பீஸ்ட் படத்துக்கு அடுத்ததாக ரஜினி நடிக்கும் படத்தை இயக்குகிறார் நெல்சன். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு இசை - அனிருத். 

ரஜினி - நெல்சன் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் பிரபல கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் மூத்த மகனான சிவ ராஜ்குமார், 1986-ல் கதாநாயகனாக அறிமுகமானார். 

ரஜினி 169 எனத் தற்போது அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி - நெல்சன் படத்தில் நடிக்க சிவ ராஜ்குமார் ஒப்புக்கொண்டால், ரஜினியும் சிவ ராஜ்குமாரும் இணைந்து நடிக்கும் முதல் படமாக ரஜினி 169 படம் இருக்கும். 

ஹர்ஷா இயக்கும் வேதா என்கிற தனது 125-வது படத்தில் சிவ ராஜ்குமார் தற்போது நடித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT