செய்திகள்

பூஜையுடன் தொடங்கியது ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்!

நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்தின் பூஜை தொடங்கியது. 

DIN

நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்தின் பூஜை தொடங்கியது. 

தமிழில் நாளை எனும் படத்தை இயக்கிய உதய் மகேஷ் தற்போது பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் இயக்குநராக வருகிறார். சமீபத்தில் வெளியான ‘பேமிலி மேன் 2’ தொடரில் செல்லம் சார் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் வரவேற்பினைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  

2015இல் டார்லிங் படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார் ஜி.வி.பிரகாஷ். 

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் கவிதாலயாவுடன் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ் படத்தில் ஜி.வி. பிரகாஷ் கதாநாயாகனாக நடிக்கிறார். மலையாள நடிகை அன்ஸ்வரா ராஜன் நாயகியாக நடிக்க உள்ளார். தேவதர்ஷினி ஜி,வி.பிரகாஷின் சகோதரியாக நடிக்க உள்ளார். சகோதரியின் மகளுடன் உள்ள உறவினைப் பற்றி படத்தின் கதை நகரும் என்று இயக்குநர் தெரிவித்துள்ளார். 

இந்தப் படத்தில் ஹசிம் அப்துல், டேனியல் அன்னே போப், மதுசூதன் ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

அடுத்தாண்டு திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படம் பிறகு டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

SCROLL FOR NEXT