செய்திகள்

பிரபாஸ் படத்தில் யோகி பாபு!

நடிகர் பிரபாஸ் படத்தில் நடிகர் யோகி பாபு நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் பிரபாஸ் படத்தில் நடிகர் யோகி பாபு நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் பிரபாஸ் தற்போது இயக்குநர் மாருதி இயக்கத்தில் உருவாகும் புதிய பான் இந்தியா திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் வேகமாக நடைபெற்று வருகிறது.

இதில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படப்பிடிப்பில் நடிகர் யோகிபாபு கலந்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, ஷாருக்கானை வைத்து அட்லி இயக்கும் ‘ஜவான்’ திரைப்படத்தில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு பான் இந்தியா திரைப்படத்தில் அவர் ஒப்பந்தமாகியிருப்பது தமிழ் சினிமா வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாா் ஈ.வெ.ரா.சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

இடஒதுக்கீடு உரிமைப் போரில் உயிா் நீத்தவா்களுக்கு அஞ்சலி

திருப்பதிக்கு பிஆா்டிசி சிறப்பு பேருந்துகள்

அண்ணாமலைப் பல்கலை.யில் சமூகநீதி நாள் உறுதிமொழி

பிரதமா் மோடி பிறந்த நாள்: பாஜகவினா் நலத்திட்ட உதவி

SCROLL FOR NEXT