அல்லு அர்ஜூனின் நடிப்பில் உருவாக இருக்கும் புஷ்பா -2 படத்தின் படப்பிடிப்பு பாங்காக்கில் துவங்க உள்ளது.
அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் கடந்த வருடம் டிசம்பர் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக வட மாநிலங்களில் இந்தப் படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது. அதிலும் புஷ்பா படத்தின் பாடல்கள் உலகம் முழுவதும் புகழ்பெற்றது.
வசூல் ரீதியாகவும் ரூ.300 கோடிக்கு வசூலித்தது.
இந்நிலையில், இப்படத்தின் 2 பாகத்திற்காக பூஜை சமீபத்தில் நடைபெற்றது. தற்போது ‘புஷ்பா 2 - தி ரூல்’ படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தின் பாங்காக் காட்டுப்பகுதிகளில் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.