செய்திகள்

நயன்தாரா- பிருத்விராஜ் நடிக்கும் ‘கோல்டு’: ரிலீஸ் பற்றிய அதிகாரபூர்வ தகவல்! 

'பிரேமம்' இயக்குநரின் அடுத்த படமான கோல்டு படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

DIN

'நேரம்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அவர் இயக்கிய மலையாள படமான 'பிரேமம்' தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு அல்போன்ஸ் தனது அடுத்த படத்தை இயக்கி வருகிறார். 

'கோல்டு' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் பிருத்விராஜ், நயன்தாரா முதன்மை வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றது. 

இந்தப் படத்தை பிருத்விராஜின் பிருத்விராஜ் புரொடக்சன்ஸ் மற்றும் மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ராஜேஷ் முருகேசன் இந்தப் படத்துக்கு இசையமைக்க, ஆனந்த் சி சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்தப் படத்திற்கு திரைக்கதை இயக்கமட்டுல்லாமல் எடிட்டிங், அனிமேஷனும் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் செய்யவிருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது முகநூல் பக்கத்தில் அடிக்கடி ரசிகர்கள் கேள்விக்கு பதிலளிப்பார். இதில் படத்தின் தமாதத்திற்கு காரணமாக சாப்பட்டை பக்குவப்படுத்த நேரமெடுக்கிறது. பொறுத்துக் கொள்ளுங்கள். நன்றாக வந்துக் கொண்டு இருக்கிறது என பதிலளிப்பார். 

இந்நிலையில் படம் வரும் டிசம்பர் மாதம் 2ஆம் நாள் தமிழ் மற்றும் மலையாளத்தில் ரிலீஸாகுமென தகவல் வெளியாகியது. இந்நிலையில் நவம்பர் 23ஆம் நாள் மாலை 6 மணிக்கு திரைப்படம் வெளியாகும் தேதி  பற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாசரேத் பள்ளியில் விளையாட்டு விழா

சாம்பவா் வடகரை அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

கிராம உதவியாளா் சங்கத்தினா் தொடா் காத்திருப்பு போராட்டம்

விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை எதிா்த்து வைகோ வழக்கு: விசாரணை பிப்.16-க்கு ஒத்திவைப்பு

ஆலங்குளத்தில் வீடு, காய்கறி சந்தையில் தீ விபத்து

SCROLL FOR NEXT