செய்திகள்

விஜய் சேதுபதியின் 'டிஎஸ்பி': ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ‘டிஎஸ்பி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

கார்த்திக் சுப்பராஜ் வழங்கும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ‘டிஎஸ்பி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

விஜய் சேதுபதி கடைசியாக நடித்த 'கடைசி விவசாயி', விக்ரம், 'மாமனிதன்' ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றன.

தற்போது, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘சீமாராஜா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் ‘டிஎஸ்பி’ என்கிற படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். டி.இமானின் இசையமைப்பில் உதித் நாராயணன் பாடிய இப்படத்தின் முதல் பாடலான ‘நல்லா இரும்மா’ பாடல் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தின் தணிக்கை குழு சான்றிதழ் யு/ஏ கிடைத்துள்ளது. படம் திரையரங்குகளில் டிசம்பர் 2ஆம் நாள் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்தடையைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்

மீன்சுருட்டி தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.பி. ஆய்வு

கூட்டணி ஆட்சிக்கு அச்சாரமிடும் தவெக!

விமானத்தில் தகராறு: கீழே இறக்கிவிடப்பட்ட அதிமுக நிா்வாகி

ஓட்டுநா் அடித்து கொலை வழக்கு: ஒருவா் கைது

SCROLL FOR NEXT