முகப்பு
செய்திகள்

காந்தாரா படத்தின் வசூல் சாதனை! 

காந்தாரா திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.400 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Updated On : 22 நவம்பர், 2022 at 9:57 PM
பகிர்:

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘காந்தாரா’. 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகிறார். ஆனால், அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்விக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் கதையே இப்படம்.


தொன்மங்களையும் அதிரடியான சண்டைக் காட்சிகளையும் இணைத்து நல்ல திரைப்படமாக ரிஷப் ஷெட்டி மாற்றியிருக்கிறார்.

கன்னட வரவேற்பை தொடர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Advertisement

ரூ.16 கோடியில் தயாரான இப்படம் உலகம் முழுவதும் ரூ.400 கோடி வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கே.ஜி.எஃப் படத்திற்கு பிறகு கன்னடத்தில் அதிக வசூலித்த படமாக காந்தாரா இருப்பது குறிப்பிடத்தக்கது. 

கர்நாடகம் - ரூ.168 கோடி 
ஆந்திரா/ தெலுங்கானா - ரூ.60 கோடி 
தமிழ்நாடு - ரூ.12.70 கோடி 
கேரளா-  ரூ.19.20 கோடி 
வட இந்தியா - ரூ.96 கோடி 
வெளி நாடுகளில்- ரூ.44.50 கோடி 
மொத்தமாக உலகம் முழுவதும் ரூ.400 கோடி வசூலனாதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.