ஏகே உடன் எஸ்கே! 
செய்திகள்

மீண்டும் அஜித்துடன்.. புகைப்படம் பகிர்ந்த சிவகார்த்திகேயன்!

ஏகே உடன் எஸ்கே!... நடிகர் அஜித்குமாருடன் இருக்கும் புகைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் பகிர்ந்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

DIN

நடிகர் அஜித்குமாருடன் இருக்கும் புகைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் பகிர்ந்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

இருவரும் கருப்பு நிற உடை அணிந்தவாறு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவர்களின் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். 

அஜித்குமார் நடிப்பில் ராஜு சுந்தரம் இயக்கத்தில் உருவான ஏகன் திரைப்படம் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் ஒரு காட்சியில் நடிகர் அஜித்குமாருடன் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருப்பார். 

அந்தக் காட்சியை சிவகார்த்திகேயனின் ஆரம்பக்கட்ட வெற்றிப்படங்களின்போது அவரின் ரசிகர்கள் இணையத்தில் பரவலாக பகிர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது அடைந்துள்ள வளர்ச்சியை புகழ்ந்து நெகிழ்ச்சி அடைந்தனர். 

மேலும், விஜய் விருதுகள் வழங்கும் விழாவில் நடிகர் விஜய்யுடனும் நின்று விருது வாங்கி எடுத்துக்கொண்ட புகைப்படமும் பரவலாக பகிரப்பட்டு வந்தது. அதில் குழந்தைகளை எல்லாம் அவரு புடிச்சிட்டாரு என நடிகர் சிவகார்த்திகேயனை நடிகர் விஜய் புகழ்ந்தது மகுடம் சூட்டியது போல மாறியது. அது உண்மையும் கூட. 

இந்நிலையில், நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் அஜித்குமாரை, சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்துள்ளார். அப்போது இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர். நடிகர் சிவகார்த்திகேயன் அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

நீண்ட நாள்களுக்குப் பிறகு மீண்டும் அஜித்குமார் சாரை சந்தித்ததில் மகிழ்ச்சி என்றும், வாழ்க்கைக்கான புத்துணர்ச்சியான சந்திப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார். அனைத்து நேர்மறையான வார்த்தைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி எனப் சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

டிரென்ட் நிறுவனத்தின் 3 வது காலாண்டு லாபம் ரூ. 510 கோடி!

யு19 உலகக் கோப்பை: சேஸிங்கில் சாதனையுடன் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

”விஜய்க்கு நாட்டுநடப்பு எதுவும் தெரியல!” - EPS | ADMK Vs TVK

மணிப்பூர் முதல்வராக பதவியேற்றார் கெம்சந்த் சிங்! 2 துணை முதல்வர்கள்!!

SCROLL FOR NEXT