புஷ்பா ரஷிய மொழி டிரைலர் வெளியீடு
புஷ்பா ரஷிய மொழி டிரைலர் வெளியானது.
புஷ்பா ரஷிய மொழி டிரைலர் வெளியானது.
அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் கடந்த வருடம் டிசம்பர் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக வட மாநிலங்களில் இந்தப் படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது. அதிலும் புஷ்பா படத்தின் பாடல்கள் உலகம் முழுவதும் புகழ்பெற்றது.
வசூல் ரீதியாகவும் ரூ.300 கோடிக்கு வசூலித்தது.
Advertisement
இந்நிலையில், ரஷியாவில் இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தனர். தற்போது, அப்படத்தின் ரஷிய மொழி டிரைலர் வெளியாகியுள்ளது.
டிச.8 ஆம் தேதி ரஷியாவில் இப்படம் திரையிடப்படுகிறது.