செய்திகள்

தெலுங்கு ‘ரஞ்சிதமே’ பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சமீபத்தில் வெளியாகி வைரலாகி வரும் வாரிசு படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடலின் தெலுங்கு வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

DIN

சமீபத்தில் வெளியாகி வைரலாகி வரும் வாரிசு படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடலின் தெலுங்கு வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' என்கிற படத்தில் நடித்து வருகிறார் விஜய். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்துக்கு இசை - தமன். இந்த படம் 2023 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. 

சமீபத்தில்  'வாரிசு' படத்தில் இடம்பெற்றுள்ள 'ரஞ்சிதமே' பாடலின் லிரிக்கல் விடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. நடிகர் விஜய் பாடிய இப்பாடல் இதுவரை யூடியூப்பில் 7 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்து வருகிறது.

இதற்கிடையே ‘வாரிசு’ படம் தெலுங்கு மொழியில் ‘வாராசுடு’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது. இதையடுத்து நாளை(30.11.22) காலை 9.09 மணியளவில் தெலுங்கு ரஞ்சிதமே பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ரஞ்சிதமே மாபெரும் வெற்றியை பெற்றுள்ள நிலையில், தெலுங்கு ரஞ்சிதமேவுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உக்ரைன் - ரஷியா போர்: ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் பலி - டிரம்ப்

குவாஹாட்டி டெஸ்ட்: கடைசி நாளிலும் தடுமாறும் இந்தியா! 5 விக்கெட்டுகளை இழந்தது!

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT