செய்திகள்

பிரபாஸின் 'ஆதிபுருஷ்' படத்துக்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு

DIN

பிரபாஸின் ஆதிபுருஷ் படத்துக்கு பாஜக சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு பிரபாஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஆதிபுருஷ். ஹிந்தி இயக்குநர் ஓம் ரௌத் இயக்கியுள்ள இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி அதிகம் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது. 

குறிப்பாக இந்தப் படத்தின் சிஜி காட்சிகள் மோசமாக இருப்பதாகவும், கார்டூன் தொலைக்காட்சி பார்ப்பது போல இருப்பதாகவும் ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை பதிவுசெய்தனர். 

இந்த நிலையில் ஹிந்து கடவுள்களான ராமர், ஹனுமன் உள்ளிட்டோரின் பண்புகள், நடத்தை, தோற்றம் ஆகியவற்றுக்கு மாறாக அவர்களை தவறாக சித்திரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுத்துள்ளது. 

மேலும் மஹாராஷ்டிரத்தில் ஆதிபுருஷ் படத்தை வெளியிட விடமாட்டோம் என அம்மாநில பாஜக தலைவர் ராம் கதம் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநில துணை முதல்வர் கேசவ பிரசாத், டீசர் ஹிந்து கடவுள்களை தவறாக சித்தரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார். 

இந்தப் படத்தில் அனுமான் மீசையில்லாமல் வெறும் தாடியுடன் இருப்பது முஸ்லீம்களைப் போல் இருப்பதாகவும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

பாகுபலிக்கு பிறகு பிரபாஸ் நடித்த படங்களான சாஹோ, ராதே ஷ்யாம் போன்ற படங்கள் தோல்வியைத் தழுவின. அதன் பிறகு மிகப் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள ஆதிபுருஷ் மீது பிரபாஸின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயில் தணிந்தது: தமிழகத்தில் பரவலாக மழை!

ரூ. 20,000-க்கு மேல் ரொக்கமாக கடன் வழங்கக்கூடாது: ஆர்பிஐ உத்தரவு

தொடர் தோல்விகள் குறித்து சஞ்சு சாம்சன் விளக்கம்!

மோடியின் பேச்சு பொய்யானது, மூர்க்கத்தனமானது: ப. சிதம்பரம் சாடல்

மீண்டும் இணைந்த அயோத்தி கூட்டணி!

SCROLL FOR NEXT