''என் கனவு நிறைவேறியது'' - 'வாரிசு' இசையமைப்பாளர் தமன் பதிவு
என் கனவு நிறைவேறியது என வாரிசு இசையமைப்பாளர் தமன் பதிவிட்டுள்ளார்.
என் கனவு நிறைவேறியது என வாரிசு இசையமைப்பாளர் தமன் பதிவிட்டுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துவருகிறார் இசையமைப்பாளர் தமன். தமிழில் நடிகர் விஜய்யின் வாரிசு, சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
மோகன்ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான காட்ஃபாதர் படத்தில் தமனின் பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
Advertisement
இதையும் படிக்க | ஹிந்தி படத்தில் பாடிய சிம்பு - வெளியான பாடல் இதோ
இந்த நிலையில் இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில், வெகுநாட்களாக காத்திருந்து .. இன்று நான் கண்ட கனவு நிறைவேறியது. என் வாழ்வில் மறக்க முடியாத நாள். இறைவனுக்கும் என் அன்னைக்கும் நன்றி. என்று தமிழில் பதிவிட்டுள்ளார்.
வாரிசு படத்துக்காக விஜய் பாடியுள்ளதைத் தான் அவர் அப்படி குறிப்பிடுகிறார் என ரசிகர்கள் தங்களது யூகங்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனால் அவர் எதைப் பற்றி அப்படி சொன்னார் என்ற தமனே சொன்னால் தான் தெரியும்.