செய்திகள்

ஆர்யாவின் 'கேப்டன்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

சக்தி சௌந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள கேப்டன் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

சக்தி சௌந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள கேப்டன் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் சக்தி சௌந்தரராஜன். இவர் இயக்கத்தில் ஆர்யா - சயீஷா இணைந்து நடித்த டெடி படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இதனையடுத்து மீண்டும் கேப்டன் படத்துக்காக ஆர்யாவுடன் கைகோர்த்துள்ளார் சக்தி சௌந்தரராஜன். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சிம்ரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். எஸ்.யுவா ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். 

கேப்டன் பட டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருந்த நிலையில், தற்போது இப்படம் செப்டம்பர் 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஆர்யாவின் தி ஷோ பீப்புள் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ள இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக வெளியிடுகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் ராணுவத் தளபதி நூலை மேற்கோள்காட்ட அனுமதிக்காதது ஏன்? ராகுல் விளக்கம்

10 மாநிலங்களில் தேடுதல் நடத்தி சைபா் குற்றவாளி கைது-சி.பி.ஐ நடவடிக்கை

மத்திய அரசால் வஞ்சிக்கப்படும் தமிழகம்: மாநிலங்களவையில் திருச்சி சிவா குற்றச்சாட்டு

பெண்ணையாறு விவகாரம்-தீா்வு காண மத்திய அரசு தீா்ப்பாயம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

மூன்று நாள்கள் பயணமாக அமெரிக்கா சென்றாா் ஜெய்சங்கா்: அமைச்சா்களுடன் முக்கிய சனை

SCROLL FOR NEXT