முகப்பு
செய்திகள்

விக்ரமின் 'கோப்ரா'வின் நிலை சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' படத்துக்கு ஏற்படுமா ?

விக்ரமின் கோப்ராவைப் போல சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் பாதிப்பை சந்திக்கலாம் என்ற விமர்சனம்  எழுந்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:13 AM
பகிர்:

விக்ரமின் கோப்ராவைப் போல சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் பாதிப்பை சந்திக்கலாம் என்ற விமர்சனம்  எழுந்துள்ளது. 

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் வருகிற 15 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் காலத்துக்கு நீ வேணும், மறக்குமா நெஞ்சம் பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் சமீபத்தில் இந்தப் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியிட்டு விழா நடைபெற்றது. 

விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு வெந்து தணிந்தது காடு படத்தின் டிரெய்லரை வெளியிட்டார். பின்னர் சிம்புவை வாழ்த்தி பேசிய கமல்ஹாசன் படத்தில் அவரை அடையாளம் தெரியவில்லை என்று தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். 

இந்தப் படத்தின் கால அளவு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி இந்தப் படம் 3 மணி நேரம் ஓடக்கூடியதாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான கோப்ரா படத்தின் கால அளவு 3 மணி நேரத்துக்கு மேலிருந்தது கடும் விமர்சனங்களை சந்தித்து. 

இந்த நிலையில் ரசிகர்களிடையே எதிர்மறை விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படத்திலிருந்து 20 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டது. இந்த நிலையில் கோப்ரா பட நிலைமை வெந்து தணிந்தது காடு படத்துக்கும் ஏற்படுமா என சிம்பு ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.