செய்திகள்

‘இனிமேதான் எங்க கேம் ஆரம்பம்...’ : ராமராஜனின் சாமானியன் டீசர் வெளியானது! 

DIN

10 ஆண்டுகளுக்கு பிறகு ராமராஜன் நடித்துள்ள ‘சாமானியன்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

தொன்னூறுகளில் முன்னணி நடிகராக இருந்த ராமராஜன், கடைசியாக 2012-ம் ஆண்டு வெளியான ‘மேதை’ படத்தில் நடித்திருந்தார். இப்போது அவர் மீண்டும் நாயகனாக நடிக்கும் படத்துக்கு ‘சாமானியன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இது அவரது 45வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

ராமராஜன், ராதாரவி, எம்.எஸ். பாஸ்கர், மைம் கோபி உள்ளிடோர் நடித்துள்ள இப்படத்தின் டீசர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என  4 மொழிகளில் வெளியாகியுள்ளது. 

எட்சட்ரா என்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கிறார். இசை- அச்சு ராஜாமணி. கதை- வி கார்த்திக் குமார், திரைக்கதை, இயக்கம் - ஆர். ராஜேஷ். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

SCROLL FOR NEXT