முகப்பு
செய்திகள்

வாரிசு படப்பிடிப்பு எப்போது முடியும்? தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அப்டேட்! 

நடிகர் விஜய் தற்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகுமென  அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 25 செப்டம்பர், 2022 at 12:36 PM
பகிர்:

நடிகர் விஜய் தற்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு தயாரிக்கிறார். 

விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, ஷாம், சரத்குமார், குஷ்பு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். தமன் இந்தப் படத்துக்கு இசையமைப்பில் விஜய் ஒரு பாடல் பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

‘வாரிசு’ திரைப்படத்தின் ஓடிடி, சாட்டிலைட் உரிமம் ஆகியவை ரூ.180 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளதாகவும் தகவல் வெளியானது. படம் பொங்கலுக்கு வெளியாகுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

தற்போது தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் படப்பிடிப்பு குறித்து கூறியதாவது: 

கடைசி ஷெட்யூல் நாளை தொடங்குகிறது. 2 சண்டைக் காட்சிகள் மற்றும் 2 பாடல்கள் மட்டுமே மீதமுள்ளது.  2023 பொங்கல் ரிலீஸுக்கு தயாராக இருங்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.