மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி 
செய்திகள்

பெண் தொகுப்பாளினியிடம் தகாத வார்த்தை பேசியதற்காக பிரபல மலையாள நடிகர் கைது! 

கடந்த வாரத்தில் நடந்த ஒரு யூடியூப் நேர்காணலில் பெண் தொகுப்பாளினியிடம்  அவமரியாதையாக பேசியதற்காக மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி கைது செய்யப்பட்டுள்ளார். 

DIN

கடந்த வாரத்தில் நடந்த ஒரு யூடியூப் நேர்காணலில் பெண் தொகுப்பாளினியிடம் அவமரியாதையாக பேசியதற்காக மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி கைது செய்யப்பட்டுள்ளார். 

ஸ்ரீநாத் பாசி ரேடியோ ஜாக்கியாக இருந்து பின்னர் நிகழ்ச்சி தொகுப்பாளராக 2011இல் பிரணயம் படத்தில் மோகன்லாலுடன் நடித்து சினிமா பயணத்தை தொடங்கினார். இபோது வரை 50 படங்களுக்கு கிட்டதட்ட நடித்துவிட்டார். இதில் கும்பளாங்கி நைட்ஸ், கப்பேளா, ஹோம், பீஸ்ம பர்வம் ஆகிய படங்களில் அவரது நடிப்பு மிகவும் பேசப்பட்டது. 

அவருடைய அடுத்த படமான சட்டம்பி (Chattambi) படத்திற்காக புரமோஷனுக்காக யூடியூப் நேர்காணல் ஒன்றில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பொறுமையை இழந்து வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. நடிகர்களை தரவரிசைப் படுத்தும்படி தொகுப்பாளினி கேட்டுள்ளார். அதற்கு அவர் இதுமாதிரி கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது என கோபமாக எஃபில் தொடங்கும் ஆங்கில வார்த்தையை உபயோகித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்துறையிடம் சென்றுள்ளார்கள்.

காலை அவரை கைதி செய்ய போகும்போது அவர் ஒருநாள் விடுமுறை கேட்டுள்ளார். காவல்துறை சம்மதித்துள்ளது. பின்னர் அவரே இன்றே வருவதாக கூறியுள்ளார். ஒரு மணி நேரம் கேள்விகளை கேட்டப்பிறகு காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். தான் எதுவும் தவறாக பேசவில்லை. அவமானப்படுத்தும் போது யாராகா இருந்தாலும் இப்படித்தான் பேசுவார்கள் என கூறியுள்ளார். பின்னர் மன்னிப்பு கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலையே காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT