எச்.வினோத் - விஜய் சேதுபதி கூட்டணியில் புதிய படம்?
இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகிவரும் ஏகே-61 திரைப்படத்தை இயக்கிவருகிறார் இயக்குநர் எச்.வினோத். ‘வலிமை’ படத்திற்குப் பின் இருவரும் இணையும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
இதையும் படிக்க: ஏகே 61: அஜித்துடன் இணையும் சஞ்சய் தத்?
Advertisement
Advertisement
இந்நிலையில், அஜித் படத்திற்குப் பின் எச்.வினோத் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து இயக்க உள்ளதாகவும் இக்கூட்டணியில் உருவாகும் படம் ‘ஹாரர்’ பாணியில் இருக்கும் என்றும் இதற்கான பேச்சுவார்த்தைகள் முடிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் சேதுபதி தற்போது ஹிந்தியில் ’மேரி கிரிஸ்துமஸ்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார்.