FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

’இனி இப்படி பேசினால் செருப்பால் அடிப்பேன்...’: பிரபல நடிகர் ஆவேசம்

பாஜகவையும் தன்னையும் இணைத்துப் பேசினால் செருப்பால் அடிப்பேன் என பிரபல நடிகர் ஆவேசமாக பதிலளித்துள்ளார்.

1 பிப்ரவரி 2024, 4:07 pm IST
பகிர்:

பாஜகவையும் தன்னையும் இணைத்துப் பேசினால் செருப்பால் அடிப்பேன் என பிரபல நடிகர் ஆவேசமாக பதிலளித்துள்ளார்.

தெலுங்கில் பிரபல நடிகரான பவன் கல்யாண் ஆந்திரத்தில் பாஜவின் ‘பி’ டீமாக செயல்பட ஜனசேனா கட்சியை தொடங்கியதாகவும் பாஜவிடம் பணம் வாங்கி தனது கட்சியை நடத்தி வருவதாகவும் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர்.

இதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் தன் கட்சி தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளிடையே  நடிகர் பவன் கல்யாண் பேசுகையில், ‘நான் பாஜவிடம் பணம் பெற்றுக்கொண்டு ’பி’ டீமாக உள்ளேன் எனக்கூறுவதை ஏற்க முடியாது. இனி இதுபோல் பேசினால் செருப்பால் அடிப்பேன்’ எனக்கூறியபடி தான் அணிந்திருந்த செருப்பை கழற்றி மேடையில் காட்டினார். 

Advertisement

Advertisement

மேலும், முன்னாள் முதல்வர் சந்திரபாபுவை அவசரமாக சந்தித்து நீண்ட நேரம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டார்.

இதனால், ஆந்திர அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments