செய்திகள்

மாஸ்டரில் 500 பேர், லியோவில் 2000 பேர்: மாஸ் அப்டேட் 

விஜய் நடித்து வரும் லியோ படத்தின் புதிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

DIN

விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யுடன் லியோ படத்தினை எடுத்து வருகிறார். இதில் த்ரிஷா, அர்ஜுன், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

காஷ்மீர் குளிரில் விருவிருப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. சமீபத்தில் அங்கு பணியாற்றிய வேலையாட்கள் குறித்து ஒரு விடியோவை வெளியிட்டு படக்குழு அவர்களுக்கு நன்றி தெரிவித்தது. இந்த விடியோ இணையத்தில் நல்ல வரவேற்பினை கொடுத்தது. 

மிஷ்கின், சஞ்சய் தத், கௌதம் மேனன் தங்களின் காஷ்மீர் படப்பிடிப்பினை முடித்துவிட்டதாக லோகேஷ் சமீபத்தில் கூறியிருந்தார். தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மாஸ்டர் படத்தில் 500 பேர் நடனமாடும் பாடலுக்கு மாஸ்டர் தினேஷ் நடனம் அமைத்திருந்தார். வாத்தி கம்மிங் எனும் இந்த பாடலுக்கு அனிரூத் தீயாக இசையமைத்து இருந்தார். இந்தப் பாடல் உலகம் முழுவதும் வைரலாகியது.

தற்போது லியோ படத்திற்காக 2000 பேர் நடனமாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக நடன கலைஞர்கள் 10 நாள் பயிற்சி எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிபிஎல்: முதல் அரைசதத்தை பதிவுசெய்த பாபர் அசாம்!

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல்! 8 பேர் பலி!

ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள் படைத்த ஹார்திக் பாண்டியா!

கோவையில் போட்டியா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

விவசாயிகள், ஏழைகளின் நலன்கள் மீதான தாக்குதல்: விபி ஜி ராம் ஜி குறித்து சோனியா காந்தி

SCROLL FOR NEXT