பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி விமர்சனங்களை சந்தித்தது. ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக க்ரித்தி சனோன் நடிக்க, சயீப் அலிகான் ராவணனாக நடித்துள்ளார்.
ஹிந்து கடவுள்களை தவறாக சித்தரிப்பதாக பாஜகவினர் ஆதிபுருஷ் டீசருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மற்றொரு புறம் இந்தப் படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகள் கார்டூன் தொலைக்காட்சிகளை விட மோசமாக இருப்பதாக ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
இதையும் படிக்க: பொன்னியின் செல்வன் பூங்குழலி, வானதி நடனமாடும் வைரல் விடியோ!
ஹிந்தி, தெலுங்கில் உருவாகும் இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் வெளியாகவுள்ளது. ஆதிபுருஷ் படம் 2023, ஜனவரி 12-ல் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.
படத்தின் டீசரின் கிராபிக்ஸ், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் காட்சிகளை ரசிகர்கள் விமர்சனம் செய்தார்கள். இதனைத் தொடர்ந்து, ஆதிபுருஷ் படத்தின் சில காட்சிகள் மீண்டும் படப்பிடிப்பு செய்து கிராபிக்ஸ் செய்யப்பட்டதை தொடர்ந்து, 2023 ஜூன் 16 வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: கமலுக்கு ஜோடியாகும் வித்யா பாலன்?
இந்நிலையில் சீதா நவமியை முன்னிட்டு சீதாவக நடித்துள்ள க்ரித்தி சனோனின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மிகவும் சாந்தமாக, அழகாக இருக்கிறது என ரசிகர்கள் இந்தப் போஸ்டரை பாராட்டி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.