முகப்பு
செய்திகள்

ஜவான் 2-வது பாடல் வெளியானது!

ஜவான் திரைப்படத்தின் 2ஆவது பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:49 AM
பகிர்:

ஜவான் திரைப்படத்தின் 2ஆவது பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தமிழில் விஜய்யை வைத்து பிகில், மெர்சல், தெறி என்று மூன்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் செப்.7 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதன் ஓடிடி, இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை ரூ.400 கோடிக்கும் மேல் விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. 

இதன் காரணமாக, இந்தாண்டின் மிகப்பெரிய படமாக ஜவான் உருவெடுத்துள்ளது. சமீபத்தில்  இப்படத்தின் இசை உரிமத்தை டீ - சீரியஸ் நிறுவனம் ரூ.36 கோடிக்கு வாங்கியுள்ளதாகவும் ஜவான் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் படத்தின் 'ஹய்யோடா' என்கிற 2ஆவது பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை அனிருத் மற்றும் பிரியா மாலி பாடியுள்ளனர்.

முன்னதாக இப்படத்தில் இருந்து முதல் பாடலாக அனிருத் பாடிய பாடல் கடந்த 31ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. 

முழு கட்டுரையைப் படிக்க →