செய்திகள்

இந்த வார்த்தையின் உரிமையாளர் இவர்தான்: நடிகர் அர்ஜுனை புகழ்ந்த விஷால்!

DIN

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

நடிகர் அர்ஜுன் பிறந்தநாளான இன்று லியோ தயாரிப்பு நிறுவனம் புதிய கிளிம்ஸ் விடியோவை வெளியிட்டுள்ளது. இதற்காக,  ‘ஹரோல்ட் தாஸ்’ என்கிற அர்ஜுன் கதாபாத்திர பெயரையும் குறிப்பிட்டுள்ளனர். 

இந்த விடியோவில் ‘தெறிக்க...’ என்று அர்ஜுன் கூறும் வசனம் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது. இதனை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஷால், “இந்த வார்த்தையின் அர்த்தம் என்னவென்று தெரியாது. ஆனால் இதன் உரிமையாளர் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் சார். 

எனது குரு, ஆசான், முன்னோடி மற்றும் நான் நடிகனானத்திற்கு காரணமான அர்ஜுன் சாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அவருக்கு வாழ்க்கையில் வெற்றி, அமைதி, செழுமை மற்றும் மகிழ்ச்சி ஆகியவை தனிப்பட்ட வாழ்விலும் சினிமா வாழ்விலும் கிடைக்க வாழ்த்துகிறேன். 

மீண்டும் உங்களுடன் பணியாற்ற விரும்புகிறேன். பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் சுதந்திர நாள் வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார். 

விஷால்-அர்ஜுன் ஏற்கனவே இரும்புத்திரை படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள். இந்தப் படம் நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முன்னாள் முதல்வா் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு தீவிர சிகிச்சை

பாலியல் காணொலிகள் விவகாரத்தில் பாஜக பிரமுகா் தேவராஜே கௌடா கைது

பிரதமா் மோடி கருத்துக்கு சித்தராமையா மறுப்பு

மஜதவுடன் இணைந்து சட்டமேலவை தோ்தலை பாஜக சந்திக்கும்: எடியூரப்பா

தம்மம்பட்டி பாரதி பள்ளி 10, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT