செய்திகள்

ஆர்ஆர்ஆர் படத்துக்கு ஆறு தேசிய விருதுகள்

DIN

மத்திய அரசால், திரைப்படத் துறையினருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், ஆர்ஆர்ஆர் படத்துக்கு ஆறு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

புது தில்லியில் இன்று 2021ஆம் ஆண்டுக்கான 69வது தேசிய விருதுகளை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்தார்.

ஆர்ஆர்ஆர் படத்தில் சண்டைப் பயிற்சியாளராக பணியாற்றிய கிங் சாலமனுக்கு சிறந்த சண்டைப் பயிற்சியாளர் விருதும், சிறந்த நடன இயக்குநருக்கான விருது பிரேம் ரக்ஷித்துக்கும், தொழில்நுட்ப கலைஞர் சீனிவாஸ் மோகனுக்கும் கிடைத்துள்ளது.

சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது ஆர்ஆர்ஆர் படத்துக்கு இசையமைத்த கீரவாணிக்கும் கிடைத்துள்ளது. இது மட்டுமல்லாமல் சிறந்த பொழுதுபோக்குப் படமாகவும் ஆர்ஆர்ஆர் படத்துக்கு விருது கிடைத்துள்ளது.

ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற கோமுராம் பீமுடு பாடலைப் பாடிய பின்னணி பாடகர் கால பைரவாவுக்கு சிறந்த பின்னணி பாடகர் விருது கிடைத்துள்ளது.

சிறந்த நடிகர் - நடிகை

சிறந்த நடிகருக்கான தேசிய விருது புஷ்பா திரைப்படத்தில் நடித்த அல்லு அர்ஜூனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகைக்கான தேசிய விருது, ஆலியா பட், சீர்த்தி சனோனுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் திரைத்துறையில், இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் உருவான கடைசி விவசாயி திரைப்படத்துக்கு இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன. மொழி வாரியான திரைப்படத்தில் சிறந்த தமிழ் திரைப்பட விருதும், இப்படத்தில் தாத்தா கதாபாத்திரத்தில் நடித்த நல்லாண்டிக்கு சிறப்பு விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

SCROLL FOR NEXT