செய்திகள்

இறுதிக்கட்டத்தில் ராதிகா சரத்குமாரின் தொடர்!

நடிகை ராதிகா சரத்குமார் நடித்துவரும் பொன்னி C/O ராணி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

DIN

நடிகை ராதிகா சரத்குமார் நடித்துவரும் பொன்னி C/O ராணி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

சினிமா மற்றும் சின்னத்திரை என இரண்டிலும் பிஸியாக இருப்பவர் நடிகை ராதிகா சரத்குமார். இவர் நடிக்கும் மற்றும் தயாரிக்கும் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கும்.

அந்த வகையில் ராதிகா சரத்குமார் நடித்த சித்தி, அண்ணாமலை, செல்வி, அரசி, வாணி ராணி உள்ளிட்ட தொடர்கள் ரசிகர்களிடையே பிரபலமடைந்தது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கிழக்கு வாசல் தொடரை ரடான் மீடியா சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் தயாரிக்கிறார். 

இந்தத் தொடரில் ரேஷ்மா முரளிதரன், தாரணி, வெங்கட் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் நடிகர் விஜய் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் நடிக்கிறார்.

இந்த நிலையில், கலைஞர் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் பொன்னி C/O ராணி தொடர் முடிவுக்கு வரவுள்ளது. இத்தொடரில் ப்ரீத்தி சஞ்சீவ் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

சிறப்பு தோற்றத்தில்  ராதிகா சரத்குமார் நடித்து வருகிறார். இந்த தொடர் வாணி ராணி தொடரின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வருகிறது. பொன்னி C/O ராணி கடந்த ஜூன் 2022-லிருந்து ஒளிபரப்பாகி வருகிறது.

பொன்னி C/O ராணி தொடர் முடியவுள்ள தகவல் அத்தொடர் ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல்! 8 பேர் பலி!

ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள் படைத்த ஹார்திக் பாண்டியா!

கோவையில் போட்டியா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

விவசாயிகள், ஏழைகளின் நலன்கள் மீதான தாக்குதல்: விபி ஜி ராம் ஜி குறித்து சோனியா காந்தி

கடனை முன்கூட்டியே அடைத்தால் சிபில் ஸ்கோர் குறையுமா?

SCROLL FOR NEXT