செய்திகள்

சூரரைப் போற்று இயக்குநருக்கு விபத்து: படப்பிடிப்பு நிறுத்தம்! 

DIN

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 2020ஆம் ஆண்டு நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் சூரரைப் போற்று. இந்த படத்திற்கு தேசிய விருதுகளும் வழங்கப்பட்டது.

தமிழில் பெற்ற வரவேற்பை தொடர்ந்து ஹிந்தி ரீமேக்கை சுதா கொங்கரா இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடிக்கிறார். சூர்யா இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளார். 

சமீபத்தில் சுதா கொங்கரா முதல்முறையாக சொகுசு காரை வாங்கியிருந்தார். இந்தப் படத்திற்கான இசையை சமீபத்தில் தொடங்கியதாக ஜிவிபிரகாஷும் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், இயக்குநர் சுதா கொங்கராவிற்கு படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டுள்ளது. கையில் காயத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வலிமிகுந்துள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்கு படப்பிடிப்பு இல்லை எனவும் பதிவிட்டுள்ளார். இது எனக்கு தேவையற்ற பிரேக் எனவும் பதிவிட்டுள்ளார். 

இந்தப் பதிவிற்கு, “விரைவில் குணமடையுங்கள் சகோதரி” என இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லைஸ்தானத்தில் பெருமாள் கோயில் தேரோட்டம்

50 சதவீத மானியத்தில் வேளாண் இடுபொருள்கள்

பேராவூரணி நீதிமன்றத்துக்கு கட்டடம் கட்ட இடம்:  உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரித்து பாஜக நாடகம்: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

காவிரி ஒழுங்காற்று குழுத் தலைவரை மாற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT