முகப்பு
செய்திகள்

வாத்தி திரைப்படத்தின் டிரைலர் தேதி அறிவிப்பு! 

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 6 பிப்ரவரி, 2023 at 8:41 PM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 11:56 AM

'திருச்சிற்றம்பலம்','நானே வருவேன்' படங்களுக்கு பிறகு தனுஷ் தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் 'வாத்தி' படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் சார் என்ற பெயரில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.  

Advertisement

'வாத்தி' திரைப்படம் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது. 

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிப்.4ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் தனுஷ், இயக்குநர் வெங்கி அட்லுரி, நடிகை சம்யுக்தா, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் உள்ளிட்ட படக்குழுவினர் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் படத்தின் டிரைலர் பிப்.8ஆம் தேதி வெளியிடப்படுமென படக்குழு அறிவித்துள்ளது.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.