செய்திகள்

'அனைவரையும் திருப்திபடுத்தக்கூடிய படைப்பு என ஒன்று இல்லை’- மைக்கேல் இயக்குநர் அதிரடி கருத்து!

மைக்கேல் திரைப்படத்தின் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி கூறிய கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது. 

DIN

புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படங்களை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ‘மாநகரம்’ படத்தில் நடித்து புகழ்பெற்ற சந்தீப் கிஷன் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ‘மைக்கேல்’ என பெயரிடப்பட்டுள்ளது.  

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் வரலட்சுமி சரத்குமார், அனுசுயா, திவ்யன்ஷா கௌசிக் உள்ளிட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தினை ஸ்ரீ வெங்கடேஷ்வரா ஸ்ரீனிவாஸ் தயாரிக்க, சாம் சி.எஸ். இசையமைக்கிறார். 

ஏற்கனவே இந்தப் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் பிப்ரவரி 3ஆம் தேதி வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியானது. 

படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வரத்தொடங்கியது. மேக்கிங் நன்றாக இருந்தாலும் எழுத்தில் கோட்டை விட்டத்தாக பலரும் கருத்து தெரிவித்தனர். 3 நாளில் உலகம் முழுவதும் மைக்கேல் திரைப்படம் ரூ.9.7 கோடி வசூலானதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: 

உங்கள் கருத்துகளுக்கு எனது அன்பு. எனது எல்லாப் படைப்புகளையும் போலவே மைக்கேல் திரைப்படமும் என் இதயத்துக்கு நெருக்கமான ஒன்றுதான். அதற்கும் என் 100 சதவிகிதம் உழைப்பையே கொடுத்திருக்கிறேன். அனைவரையும் திருப்திபடுத்தக்கூடிய படைப்பு என்ற ஒன்று இல்லை. ஒவ்வொருக்கும் ரசனையும் விருப்பத்தேர்வும் மாறுபடவே செய்யும். மைக்கேலை ரசித்தவர்களுக்கு நன்றி;மாறுபட்ட கருத்துக் கொண்ட ரசிகர்களுக்கு அடுத்த முறை உங்களையும் கவரும் ஒரு சினிமாவுக்காக உழைக்கத் தயாராக இருக்கிறேன்.உங்கள் அனைத்து கருத்துக்களையும் மதிக்கிறேன். ஆகப்பெரும் வாஞ்சையுடன் ரஞ்ஜித் ஜெயக்கொடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT