செய்திகள்

'இருள் ராஜ்..’ பிரகாஷ் ராஜை விமர்சித்த காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர்!

DIN

நடிகர் பிரகாஷ் ராஜை காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர் கடுமையாக விமர்சித்துள்ளார். 

காஷ்மீரில் 1990களில் இந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியான திரைப்படம் ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’

விவேக் ரஞ்சன் அக்னிகோத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான  இப்படம்  இந்து மத ஆதரவாளர்கள் மற்றும் வலதுசாரிய அரசியல் கட்சியினர் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றது. 

அதேநேரம், உண்மையான தகவல்களுக்கு மாறாக இது உருவாக்கப்பட்டுள்ளது என எதிர்ப்புகளும் கிளம்பின.

இந்நிலையில், கேரள இலக்கிய விழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ், ‘காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் ஒரு குப்பை. அதற்கு ஆஸ்கர் இல்லை பாஸ்கர் கூட கிடைக்காது. இது பிரச்சார பாணியிலான திரைப்படம். அவர்களுக்கு(இந்து மத அடிப்படைவாதிகள்) குரைக்க மட்டுமே தெரியும். கடிக்கத் தெரியாது. பதான் திரைப்படத்தை புறக்கணிக்க முயற்சி செய்தனர். ஆனால், அப்படம் ரூ.800 கோடி வசூலித்துள்ளது. இந்த முட்டாள்களால் மோடியின் படத்தை ரூ.30 கோடிக்குக் கூட ஓடவைக்க முடியவில்லை’ எனக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக இயக்குநர் விவேக் அக்னிகோத்ரி, ‘காஷ்மீர் ஃபைல்ஸ் போன்ற சிறிய, மக்களுக்கான திரைப்படம் பல நக்சல்களுக்கு தூக்கமில்லாத இரவுகளைக் கொடுத்துள்ளது. அதில் பார்வையாளர்களை குரைக்கும் நாய் என்ற ஒருவர் படம் வெளியாகி ஓராண்டு கழித்தும் கஷ்டப்படுகிறார். மிஸ்டர். இருள் ராஜ்.. பாஸ்கர் எப்படி எனக்குக் கிடைக்கும்? அவன் அவள் எப்போதும் உங்களுடையது.’ என டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்பாக்கம்: கார் விபத்தில் 5 இளைஞர்கள் பலி

தில்லியில் மட்டும் ’க்யூட்-யுஜி’ தேர்வு ஒத்திவைப்பு!

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை இன்று ரத்து!

முகூா்த்தம், வார விடுமுறை: 1,875 கூடுதல் பேருந்துகள் இயக்கம்

விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

SCROLL FOR NEXT