செய்திகள்

‘சித்தார்த்-அதிதி ராவ் காதலிப்பது உறுதியா?’- இருவரும் ஜோடியாக சுற்றுவதால் ரசிகர்கள் கேள்வி! 

நடிகர் சித்தார்த் நடிகை அதிதி ராவ் ஹைதரி உடன் ஒன்றாக காரில் பயணம் செய்யும் விடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. 

DIN

நடிகர் சித்தார்த் இயக்குநர் மணிரத்னம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் ஷங்கர் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்தார். 2019இல் அவரது அருவம் படம் வெளியானது.தெலுங்கில் 2021இல் மஹாசமுத்திரம் படம் வெளியானது. இந்தப் படத்தில் நடிகை அதிதி ராவ் ஹைதரி உடன் நடித்திருந்தார்.

அதிதி ராவ் ஹைதரி தமிழில் காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம், ஹே சினாமிகா போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். அவரது பிறந்தநாளுக்கு ரசிகர்களும் பலர் நடிகர் நடிகைகளும் வாழ்த்து தெரிவித்தனர். சித்தார்த் கூறிய வாழ்த்து செய்தி மட்டும் சமூக வலைதளங்களில் வைரலானது.

சித்தார்த்துக்கு பல நடிகைகளுடன் காதல் இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தாலும் தற்போது அதிதி ராவுடன் காதல் இருப்பதாக அவரது இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. அந்த பதிவில் சித்தார்த், “இதய ராணிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! உங்களது சிறிய, பெரிய அனைத்து விதமான கனவுகளுக்குமாக கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்” என எழுதி இருவரும் ஒன்றாக எடுத்த புகைப்படத்தினை பதிவிட்டு இருந்தார். இதனால் இருவரும் காதலிக்கிறார்களோ என சந்தேகம் எழுந்தது. 

இந்நிலையில் மும்பை ஹோட்டலில் உணவருந்திவிட்டு ஒன்றாக காரில் ஏறும்போது எடுக்கப்பட்ட விடியோ வெளியாகியுள்ளது. இதில் சித்தார்த் மட்டும் முககவசம் அணிந்துள்ளார். ஆனாலும் அது அவர்தானென நன்றாகவே தெரிகிறது. இதனால் இருவரும் காதலிப்பது உறுதியென ரசிகர்கள் கமெண்டில் கருத்து தெரிவித்து வருகின்றனர். வெறும் டேட்டிங்காக கூட இருக்கலாம் எனவும் கூறுகின்றனர். ஆனால் இந்த ஜோடிகள் இதுகுறித்து எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

த.வெ.க. கரூர் மாவட்ட செயலரை போலீஸ் காவலில் விசாரிக்கத் திட்டம்

ஆப்கன் விமானத் தளத்தை கைப்பற்ற முயற்சி! அமெரிக்காவுக்கு எதிராக இந்தியா கூட்டறிக்கை!

புன்னகையில் தொடங்குகிறது அமைதி... ஐஸ்வர்யா ராஜேஷ்!

நீலகிரி மாவட்டத்துக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

வெளியூர் செல்கிறேன்.. பாய் பாய் எனப் பதிவிடாதீர்! சைபர் மோசடிக்கு துணை போகாதீர்!

SCROLL FOR NEXT