வெட்னஸ்டே சீசன் 2 வெப் சீரிஸை கைப்பற்றத் தவறியதா நெட்ஃபிளிக்ஸ்? 
செய்திகள்

வெட்னஸ்டே சீசன் 2 வெப் சீரிஸை கைப்பற்றத் தவறியதா நெட்ஃபிளிக்ஸ்?

லட்சோப லட்ச ரசிகர்களைப் பெற்றிருக்கும் வெட்னஸ்டே வெப் சீரிஸ் நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இரண்டாவது சீசன் வேறொரு ஓடிடி தளம் வாங்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

DIN

லட்சோப லட்ச ரசிகர்களைப் பெற்றிருக்கும் வெட்னஸ்டே வெப் சீரிஸ் நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இரண்டாவது சீசன் வேறொரு ஓடிடி தளம் வாங்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜென்னா ஓர்டேகா நடித்து, லட்சக்கணக்கான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு, பெரும் ஆதரவைப் பெற்றது வெட்னஸ்டே என்ற வெப் சீரிஸ்.

கடந்த ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெட்னஸ்டே வெப்சீரிஸ் வெளியானது. பல கோடி பேரால் பார்க்கப்பட்டு, தொடர்ந்து ரசிகர்களை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன் ஒரு பாடல் கூட, யூ-டியூப்பில் பல கோடி பேரால் பார்வையிடப்பட்டிருப்பதாக புள்ளிவிவரம் காட்டுகிறது.

இதற்கிடையே, வெட்னஸ்டே வெப் சீரிஸை தயாரித்த எம்ஜிஎம் நிறுவனமும் அமேசானும் நடத்திய ஒப்பந்தம் நிறைவு பெற்று, தற்போது வெட்னஸ்டே வெப் சீரிஸ் இரண்டாம் பாகம் அதன் ஓடிடி பிளாட்ஃபார்மான பிரைம் விடியோவுக்குச் சொந்தமாகியிருக்கிறது.

வெட்னஸ்டே வெப் சீரிஸ் இன்னமும் அதன் இரண்டாம் பாகத்துக்குத் தயாராகவில்லை என்றபோது, உலகளவில் பெற்ற வெற்றி காரணமாக, நிச்சயம் இதன் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என்று உறுதியாக நம்பப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் மூன்று நாள் பயணமாக இன்று தமிழகம் வருகை!

தமிழகத்தில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி

எஃப்1 காா் பந்தயம்: லாண்டோ நோரிஸுக்கு 6-வது வெற்றி!

கபடிக்கு நவீன கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்: மு. வீரபாண்டியன்

மதுபோதையில் கழுத்தை அறுத்துக் கொண்ட நபா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT