செய்திகள்

காந்தாரா 100வது நாள்: ரிஷப் ஷெட்டியின் நெகிழ்ச்சி ட்வீட்!

பிரபல கன்னட திரைப்படம் ‘காந்தாரா’ திரையரங்குகளில் 100வது நாளை நிறைவு செய்துள்ளது. 

DIN

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில், ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘காந்தாரா’. தொன்மங்களையும் அதிரடியான சண்டைக் காட்சிகளையும் இணைத்து நல்ல திரைப்படமாக ரிஷப் ஷெட்டி மாற்றியிருக்கிறார்.

கன்னட  வரவேற்பை தொடர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ரூ.16 கோடியில் தயாரான இப்படம் இதுவரை வெளியான அனைத்து மொழிகளிலும் சேர்த்து ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், காந்தாரா திரைப்படம் நவம்பர் 11ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியானது. 

இந்நிலையில், 100நாட்களை தியேட்டரில் நிறைவு செய்துள்ளது காந்தாரா. அதன் விவரங்களை இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இது குறித்து, “நமது வேர்களை திரும்பிப் பார்க்க வைத்து கலாசாத்திரத்தின் மீது பக்தியை ஏற்படுத்தி எப்போதும் கொண்டாடும் ஒரு படமாக மாற்றியுள்ளது காந்தாரா. இதை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் நன்றி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓணம்: சென்னை - கண்ணூர் இடையே சிறப்பு ரயில்! முன்பதிவு தொடங்கியது!

இளைஞர் தூக்கி வீசப்பட்ட விவகாரம்: விஜய், பவுன்சர்கள் மீது வழக்குப் பதிவு!

விநாயகர் சதுர்த்தி: ராகுல் காந்தி வாழ்த்து!

தனி விமானம் மூலம் பிகார் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி!

SCROLL FOR NEXT